×

காரைக்காலில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

காரைக்கால், ஜூலை 18: காரைக்கால் மாவட்ட நலவழித்துறை சார்பில், தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ், காரைக்கால் பகுதி திருநகரில் ரூ.15 லட்சம் செலவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவிற்கு, புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை வகித்து, புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில், வடக்குத் தொகுதி எம்எல்ஏ திருமுருகன், மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ், நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் மோகன்ராஜ், அரசு பொது மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஆரம்ப சுகாதார நிலையம் குறித்து துணை இயக்குநர் க்டர் மோகன்ராஜ் கூறியது:
இந்நிலையம் பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை மட்டுமே தற்போது செயல்படும். மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட 6 ஊழியர்கள் பணியில் இருப்பர். இசிஜி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ கருவிகள் இம்மையத்தில் உள்ளன. மேலும் பல மருத்துவ பரிசோதனைக் கருவிகள் விரைவில் இந்த மையத்தில் அமைக்கப்படவுள்ளது என்றார்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...