×

நாகையில் கிசான் கார்டு பெற விவசாயிகளுக்கு அழைப்பு

நாகை, ஜூலை 18: நாகை மாவட்ட விவசாயிகள் கிசான் கார்டு பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கும் திட்டம் (கிசான் கார்டு) தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக 1998ம் வருடம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடன் அட்டையை கொண்டு விவசாயிகள் விதைகள்,
உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் போன்றவற்றை வாங்கிட பயிர்க் கடன் குறைந்த வட்டியில் பெற்றிடலாம். தற்சமயம் கடன் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு போன்றவற்றிற்கும் வழங்கப்படுகிறது.

மேலும் எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் பயிர்க்கடன் தொகை ரூ.1லட்சத்திலிருந்து ரூ.1.60 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தாங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் வங்கி சேமிப்பு கணக்கின் மூலம் பயன் பெறலாம். இதுவரையிலும் கணக்கு தொடங்கவில்லை என்றால் உடனே வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு தேவையான ஆதார் கார்டு நகல் மற்றும் ஆவணங்களை வைத்து புதிய கிசான் கிரெடிட் கார்டு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...