குளித்தலையில் நிலையான பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தல்

குளித்தலை ஜூலை 18: குளித்தலையில் நிலையான பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என தமாகா வலியுறுத்தி உள்ளது.குளித்தலை நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் 117வது பிறந்த நாள் கூட்டம் பெரிய பாலத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு கரூர் கிழக்கு மாவட்டத் தலைவர் வளையப்பட்டி அசோக் குமார் தலைமை வகித்து பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கி கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார் நகரத் தலைவர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் குளித்தலை முசிறியில் இருந்து செல்லும் நகரப் பேருந்துகள் அய்யர்மலை அரசு கல்லூரி வரை சென்று வர வேண்டும் .குளித்தலைக்கு நிலையான பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். தென்கரை வாய்க்காலை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குளித்தலை பெரிய பாலத்தில் ஆண், பெண் நவீன கழிப்பிடம் அமைக்க வேண்டும் மத்திய மாநில அரசுகள் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். தீவிர மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். நீர்நிலைகள் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மணப்பாறை குளித்தலை ரயில்வே கேட் பாலம் வைக்க வேண்டும். குளித்தலை நகராட்சி உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பெயர் பலகை வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கரூர் கிழக்கு மாவட்ட குளித்தலை வட்டார நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

Tags :
× RELATED வேப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில்...