சர்வதேச நீதி தின விழிப்புணர்வு பேரணி

கரூர், ஜூலை18: சர்வதேச நீதித் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.குற்றவியல் நடைமுறைகளை முதன் முதலில் அமல்படுத்திய நாளை நினைவு கூறும் வகையில் நீதி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, நேற்று காலை கரூர் ஐந்து ரோடு அருகே மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் துவக்கி வைத்தார். இதில், மகிளா நீதிமன்ற நீதிபதி சசிகலா, தலைமை குற்றவியல் நடுவர் கோபிநாத், முதன்மை சார்பு நீதிபதி மலர்விழி உட்பட அனைத்து நீதிபதிகளும், டிஎஸ்பி கும்மராஜா உட்பட அனைத்து போலீசாரும் கலந்து கொண்டனர்.பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதை மருந்து கடத்தல் தடுப்பு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி மற்று இழப்பீடு போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவிகள் பேரணியாக நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மீண்டும் 5 ரோடு வந்தடைந்தனர்.

வெள்ளியணை, மண்மங்கலம், ஒத்தக்கடை, பாலம்மாள்புரம், குப்பிச்சிபாளையம் ஆகிய துணை மின்நிலைய பகுதிகள்:வெள்ளியணை: வெள்ளியணை, செல்லாண்டிப்பட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கணாங்குறிச்சி, விஜயநகரம், கந்தசாரப்பட்டி, முஷ்டகிணத்துப்பட்டி.மண்மங்கலம்: வெங்கமேடு, வாங்கப்பாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னாம்பள்ளி, வாங்கல், மண்மங்கலம், என்.புதூர், கடம்பங்குறிச்சி, வள்ளியப்பம்பாளையம், வடுகப்பட்டி.ஒத்தக்கடை: ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதன்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமுக்கூடலு£ர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளிபாளையம்.
பாலம்மாள்புரம்: பாலம்மாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்துரோடு, கருப்பாயிகோயில் தெரு, கச்சேரிபிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, மார்க்கெட்.குப்பிச்சிபாளையம்: வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுத்தானு£ர்,  குப்பிச்சிபாளையம், கோப்பம்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம்.

Tags :
× RELATED தரகம்பட்டி பெண்கள் உண்டு உறைவிட...