வேகத்தடையில் வெள்ளை கோடுகள் அழிந்ததால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

கரூர், ஜூலை 18: வேகத்தடையில் கோடுகள் அழிந்ததால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.கரூர் திருச்சி சாலையில் காந்திகிராமம் மெயின்ரோட்டில் தெரசா பள்ளி அருகேயும், காந்திகிராமம் புறக்காவல் நிலையம் அருகிலும் வேகத்தடை உள்ளன. இந்த வேகத்தடையில் உள்ள வெள்ளைக்கோடுகள் அழிந்துவிட்டன. மேலும் இந்த கோடுகள் இருந்தாலும் பகலில் மட்டுமே தெரிகின்றன. இதானால் இரவில் வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் தடுமாற்றம் அடைகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் ஒளிஉமிழும் கோடுகளை போட வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் சாதாரண வெள்ளைகோடுகளையே போடுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே ரிப்ளக்டர் ஸ்டிக்கர்களை ஒட்டவேண்டும், ஒளிஉமிழும் கோடுகளை வேகத்தடை மீதும் அதன் அருகேயும் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED அரச மர வேர்களுக்கு நடுவில் விநாயகர்...