வெள்ளியணை குளத்திற்கு நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

கரூர், ஜூலை 18: வெள்ளியணை குளத்திற்கு நீர் ஆதாரத்தை பெருக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் வெள்ளியணையில் பாசனக்குளம் உள்ளது. இந்த குளத்துக்கு குடகனாறு அணையில் இருந்து தண்ணீர் வருகிறது. மழையின்மையால் கடந்த 5ஆண்டுக்கும் மேலாக குளத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் வரவில்லை. தொடர்ந்து வறட்சி மழையின்மை, காரணமாக மக்கள் குடிநீருக்கே சிரமப்படுகின்றனர். கர்நாடக பெருவெள்ளம் காரணமாக 3மாதத்திற்கு முன்னர் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டுஓடியது. உபரிநீரை பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தாததால் குளத்திற்கு தண்ணீர் வரவில்லை.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வெள்ளியணை பெரியகுளத்திற்கு குடகனாற்றில் இருந்து தண்ணீர் வரும். கடந்த 5ஆண்டுகளாக மழையின்மை காரணமாக குளத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் வரவில்லை.பிறபகுதிகளில் மழைபெய்தும் குடகனாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் கரூர் மாவட்ட எல்லையிலும் குடகனாறு அணை உள்ளது. காவிரியில் உபரிநீர் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு எங்கள் ஊர்வழியாக குழாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டுசெல்கின்றனர்.
பிற ஊர்களுக்கு நீர்கொண்டு செல்லும்போது அருகிலேயே உள்ள வெள்ளியணைக்கு தண்ணீரைகொண்டு வர திட்டம் செயல்படுத்த வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். காவிரியாற்றில் இருந்து 17கிமீ உள்ளது வெள்ளியணை பெரியகுளம். ராட்சத குழாய்களை அமைத்து உபரிநீர் வரும் காலங்களில் நீர்உந்து செய்யப்பட்டு குளத்தை அடையுமாறு திட்டத்தை செயல்படுத்தியிருக்கலாம். மேலும் குடகனாறு அணையில் இருந்து வெள்ளியணை 15கிமீ து£ரத்தில்உள்ளது. மாயனு£ர் 17கிமீ து£ரத்தில்உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பாசனத்திற்கும் நீர்கிடைக்கும். நீராதாரமும் பெருகும்.நீர் ஆதாரத்தைபெருக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் 450ஏக்கர் பரப்பரளவு வேளாண்நிலங்கள் பயனடையும். 10ஆயிரம் விவசாய குடும்பத்தினர் பயனடைவார்கள். வெள்ளியணை, ஜெகதாபி, பொரணி, உப்பிடமங்கலம், சேங்கல், காணியளம்பட்டி, பஞ்சப்பட்டி, வடகம்பாடி, முத்தம்பட்டி, குமாரபாளையம்,.செல்லாண்டிபட்டி, மணவாடி, கத்தாளப்பட்டி போன்ற ஊர்கள் உள்ளிட்ட அய்யர்மலை விவசாயிகள் பயனடைவார்கள். மழையும் இல்லை. மாற்றுத்திட்டமும் இன்றி குளம் நீரின்றிகாணப்படுகிறது என்றனர்.

Tags :
× RELATED தரகம்பட்டி பெண்கள் உண்டு உறைவிட...