கல்வி வளர்ச்சி நாள் விழா

க.பரமத்தி ஜூலை.18: க.பரமத்தி ஒன்றியம் மொஞசனூர் ஊராட்சி தொட்டியபட்டி தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி காமராஜர் உருவப்படம் வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பள்ளியில் நடைபெற்றது.விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி வரவேற்றார். முக்கிய நிர்வாகி பிரகாஷ் தலைமை வகித்து ரூ.10ஆயிரம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார்.விழாவில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.முடிவில் ஆசிரியை ரேவதி நன்றி கூறினார்.

Tags :
× RELATED கல்வியை காவிமயமாக்க மத்திய பாஜ அரசு திட்டம்