×

உள்ளாட்சி கிணறுகள் வறண்டதால் காவிரியில் தண்ணீர் வருமா? மக்கள் எதிர்பார்ப்பு

கரூர், ஜூலை 18: உள்ளாட்சி குடிநீர் கிணறுகள் வறண்டு போனதால் காவிரியில் தண்ணீர் வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.கர்நாடக அணைகள் நிரம்பியதை தொடர்ந்து கடந்த ஆண்டு கரூர் காவிரியாற்றில் வினாடிக்கு 2லட்சத்து 30ஆயிரம் கன அடிநீர் வந்தது. வெள்ளப்பெருக்கு தொடர்ந்து அமராவதி அணையும் நிரம்பியதால் அதன் உபரிநீரும் காவிரியில் கலந்து பெருவெள்ளமாக மாறியது. உள்ளாட்சி மன்றங்கள் காவிரிக்கரையோரம் குடிநீர் கிணறுகளை வெள்ளம் சூழ்ந்ததால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.கரூர் நகராட்சி பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகம் தடைபட்டது. அதன் பின்னர் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. 2லட்சம், ஒருலட்சத்து 67ஆயிரம், ஒருலட்சத்து 25ஆயிரம் என நீர்வரத்து குறைந்தது. ஆகஸ்டு 22ம்தேதி 59ஆயிரம் கனஅடியாகி, ஆகஸ்டு 26ம் தேதி 22ஆயிரம் கன அடியாக நீர்வரத்து சரிந்தது.,

செப்டம்பரிலும் நீர்வரத்து குறைந்து அக்டோபர் மாதம் 13ஆயிரம் கனஅடியாகஇருந்தது. நவம்பரில் 17ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. பின்னர் வெறும் 3ஆயிரம் கன அடியாகிவிட்டது, டிசம்பரில் மீண்டும் 12ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. பிப்ரவரி மாதம் 600கன அடியாக சரிந்துவிட்டது, நேற்றைய நிலவரப்படி மாயனு£ர் காவிரி தடுப்பணையில் நீர்வரத்தில்லை. இதனால் ஆற்றிலும், கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்படவில்லை.
காவிரியாற்றில் கடந்த ஆண்டு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இந்த ஆண்டு வறண்டுபோய் கிடக்கிறது. காவிரி பிரச்சனையில் மத்திய மாநில அரசுகள் உரிய நீரைப் பெற நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் கூறி வருகின்றனர்.கரூர் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் சார்பில் காவிரியாற்றில் குடிநீர் உறிஞ்சு கிணறுகளும், நீர்சேகரிப்பு கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவை வறண்டுபோய் காணப்படுகிறது. ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நீர்உறிஞ்சும் மோட்டார்கள் மூலமாக குடிநீர் விநியோக தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்து விநியோகிக்கப்படுகிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் வந்தால் குடிநீர் கிணறுகளுக்கு போதுமான நீர் கிடைக்கும், என்பதால் நீர்வரத்தை எதிர்பார்த்துள்ளனர்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா