×

மழைநீரை சேமிப்பது போல மாணவர்கள் சாதனை

திருவள்ளூர், ஜூலை 18: தமிழகத்தில் குடிநீர் ஆதாரத்தை பெருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் மத்திய அரசும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஜல் சக்தி அபியான் என்ற திட்டத்தை அறிவித்து, அதன் மூலம் தமிழகமெங்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இதனிடையே திருவள்ளூரில் உள்ள சிஎஸ்ஐ கௌடி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 1,854 பேர் ஜல் சக்தி அபியான் திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட லோகோ போன்று, 50 ஆயிரம் சதுர அடியில் மழை நீரை சேமிப்பது போல நின்று உலக சாதனை புரிந்தனர்.இந்த சாதனை ‘’இந்தியன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’’ மற்றும் ‘’அமேசிங் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’’ என்ற இரண்டு சாதனை நிறுவனங்களைப் பதிவு செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.ஸ்டேன்லி தேவபிரியம் முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் த.ராஜேந்திரன் வரவேற்றார்.

இதில், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், நீர் மேலாண்மை குறித்தும், நீரின் அவசியம் குறித்தும் பள்ளி மாணவர்களிடையே உரையாற்றினார். தொடர்ந்து, இரண்டு சாதனை நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார். முடிவில், மாவட்ட கல்வி அலுவலர் முனிசுப்ராயன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்