×

திருத்தணி நகராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

திருத்தணி, ஜூலை 18: திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இத்திட்டத்தை அமல்படுத்தினால் நிலத்தடி நீர் வெகுவாக உயர்ந்து, குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் என நகராட்சி தரப்பில் கருதப்படுகிறது.இந்நிலையில், திருத்தணியில் மழைநீர் சேகரிப்பு குறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி துவக்கி வைத்தார். நகராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணியில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தளபதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

பேரணியின்போது, அனைவரும் மழைநீர் சேகரிப்பு குறித்து விளம்பர பதாகைகளை ஏந்தி, மக்களிடையே மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இதுதவிர அரசு பள்ளிகள், மருத்துவமனை உள்ளிட்ட அதிகளவு மக்கள் கூடும் இடங்களில் கலைநிகழ்ச்சி மூலம் மழைநீர் சேகரிப்பு குறித்து பிரசாரம் நடைபெற்றது.இதில் நகராட்சி பொறியாளர் விஜய காமராஜ், துப்புரவு ஆய்வாளர் முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...