×

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் நச்சு புகையை வௌியேற்றும் தொழிற்சாலை: மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி

கும்மிடிப்பூண்டி, ஜூலை 18:
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் பெரும்பாலானவை இரும்பு உருக்காலை மற்றும் மின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஆகும். இந்த தொழிற்சாலைகளில் இருந்து தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் நச்சுக் புகை வெளியேற்றப்படுகிறது.இதனால் இந்த தொழிற்சாலையை ஒட்டியுள்ள கிராமங்களான பாப்பன்குப்பம், சித்தராஜ் கண்டிகை, சிறுபுழல்பேட்டை, புதுகும்மிடிப்பூண்டி, கோபால் ரெட்டி கண்டிகை, பழம்பாளையம், சிந்தலகுப்பம், ம.பொ.சி நகர், விவேகானந்தர் நகர், நாகராஜ் கண்டிகை, சாமிரெட்டி கண்டிகை ஆகிய பகுதியை சேர்ந்த மக்கள், இந்த நச்சுப் புகை கலந்த காற்ைற சுவாசிக்கின்றனர். இதனால், அவர்கள் சுவாச கோளாறு, கேன்சர் உள்பட பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.  

அத்தோடு சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கார், லாரி, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண் எரிச்சல், முச்சுத்திணறலால் பாதிக்கப்படுகின்றனர்.இதனால் சாலையில் செல்லும் கவனம் சிதறி அவர்கள் விபத்தில் சிக்கி உயிர் இழப்பு ஏற்படும் அபாய சூழல் உள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அங்கங்கே கருவிகள் பொருத்தப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கண்டறியப்பட்டு தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு...