மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர குறைதீர் கூட்டம் நடத்த வலியுறுத்தல்

காஞ்சிபுரம், ஜூலை 18: மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் காஞ்சிபுரம் சார் ஆட்சியர் சரவணனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அவர்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:  மாற்றுத்திறனாளிகள் அடையாளச் சான்று, உதவித்தொகை, 100 நாள் வேலை போன்ற பல்வேறு அரசு திட்டங்களை பெறுவதற்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் கோட்டாட்சியர்களின் கீழ் உள்ள 13 தாலுகா அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்குச் சென்றவர முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனைத் தவிர்க்க மாதந்தோறும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாதாந்திர சிறப்பு குறைதீர் கூட்டம் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடத்தில் நடத்த வேண்டும். அவ்வாறு நடைபெறும் கூட்டத்திற்கு முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
 தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பாரதி அண்ணா தலைமையில் மாவட்ட தலைவர் முனுசாமி மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் , மாவட்ட பொருளாளர் பாலாஜி உள்ளிட்டோர் சப் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Tags :
× RELATED வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை