வெங்காடு அரசு உயர்நிலை பள்ளியில் காமராஜர் உருவ படத்தை வரைந்த மாணவர்கள்

பெரும்புதூர், ஜூலை 18: மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு பெரும்புதூர் அருகே உள்ள வெங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். பள்ளி அருகில் 50 அடி அகலம், 60 அடி நீளத்தில் காமராஜர் திருவுருவ படத்தை பள்ளி மாணவர்கள் வரைந்தனர்.இதனை மாவட்ட கல்வி அலுவலர் மதிவாணன் திறந்து வைத்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களால் உருவாக்கபட்ட ‘’மூன்றாம் சக்தி’’ என்ற மாத இதழை பெரும்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் வெங்காடு உலகநாதன் வெளியிட்டார். அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டுவைத்தனர். மேலும் எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து அட்டைகளை பள்ளி மாணவர்கள் அனுப்பி வைத்தனர்.விழாவில் தனியார் தொழிற்சாலை மனிதவள மேலாளர்கள் டேனியல், கென்னடி, ஜெயவேலு, அன்பு, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் மாணவர் காவல்படை துவக்கம்