×

திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் திட்டப் பணிகள் எம்எல்ஏ ஆய்வு

திருக்கழுக்குன்றம், ஜூலை 18: திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் நடந்து வரும் திட்டப் பணிகளை எம்.எல்.ஏ. இதயவர்மன் ஆய்வு செய்தார்.
திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு உட்பட்ட  வன்னியர் தெருவில் உள்ள பரமசிவன் நகர் பகுதியிலுள்ள குளம் ஆகியவை தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், திருக்கழுக்குன்றம் பெரிய ஏரியில் புதிதாக தோண்டப்படுகின்ற 2 கிணறுகள் மற்றும் வடக்குப்பட்டு பகுதியில் நடந்து வரும் சாலையமைக்கும் பணி உள்ளிட்ட திட்டப் பணிகளை திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் பார்வையிட்டார். பின்னர், அந்தப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். அவருடன் முன்னாள் எம்எல்ஏ வீ.தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயலாளர் டி.யுவராஜ் மற்றும் நிர்வாகிகள் விஜயன், செல்வக்குமார்,     அரி தினேஷ், செங்குட்டுவன், சரவணன், இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED காஞ்சி சங்கரா பல்கலைக்கழகத்தில் வேதபாடசாலை மாணவர்கள் ஆய்வு