ஈஞ்சம்பாக்கத்தில் ரூ.30 லட்சத்தில் ஈமச்சடங்கு மண்டபம்: மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தார்

துரைப்பாக்கம், ஜூலை 18: சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் 196வது வார்டுக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம் மயான பூமியில் எரிவாயு எரியூட்டகம் உள்ளது. இங்கு,  பஞ்சாப் யூத் அசோசியேஷன் ரெஜிஸ்டேட் (பியார்) என்ற அறக்கட்டளை சார்பில் சுமார் ₹30 லட்சம் மதிப்பீட்டில் ஈமச்சடங்கு செய்யும் மண்டபம், காத்திருக்கும் அறை, இருக்கைகள், வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக பார்க்கிங் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன.

இதனை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு ஈமச்சடங்கு மண்டபம், காத்திருப்போர் அறை ஆகியவற்றை திறந்து வைத்தனர்.
Advertising
Advertising

இதில் பஞ்சாப் யூத் அசோசியேஷன் ரெஜிஸ்டட் நிறுவன உறுப்பினர்கள் தீபக் தவான், சஞ்சீவ் காலியா, பிரமாத் கலாரா, பியார் அறக்கட்டளை தலைவர் அஜய் ஆனந்த், செயலாளர் ஆர்யூத் தவான், தினேஷ் கட்யால்  மற்றும் உபயதாரர்கள் அசோக் எலாட்டி, சசி மல்கோத்ரா, கேப்டன் ரவி மகாஜன், ஹரிஷ் சங்கி, சுனில் ஹசிஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: