பணி நிரந்தரம் செய்ய கோரி அங்கன்வாடி ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

புழல், ஜூலை 18: மாதவரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் முன்பாக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதவரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட பணியாளர், உதவியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருபர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரியும், சமைக்க காய்கறி, சிலிண்டர் வாங்குவதற்கு காலதாமதம் இல்லாமல் பணத்தை உடனடியாக வழங்க கோரியும், 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புழலில் உள்ள மாதவாரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் முபு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை மாவட்ட டிஐடியு பொருளாளர் குப்புசாமி தலைமையில் 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: