×

கன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் திடீர் குறைவு படகு சேவை பாதிப்பு


கன்னியாகுமரி, ஜூலை 18: சர்வதே சுற்றுலா தலமான கன்னியாகுமரியில், அவ்வப்போது கடல் சீற்றம், நீர்மட்டம் குறைவு என மாறிமாறி காணப்படுகிறது. இதனால் படகு சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென கடல் நீர்மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. காலை 8.30 மணிக்கு ெதாடங்க வேண்டிய படகு சேவையில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் படிப்படியாக கடல் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து காலை 10.30 மணியளவில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தனது படகு சேவையை தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் படகு பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை கண்டுகளித்தனர்.

Tags :
× RELATED தமிழ்நாட்டில் முதல் முறையாக ரோஜாவனம்...