வேரோடு சாய்ந்த ஆலமரம் அகற்றம்

ரிஷிவந்தியம், ஜூலை 18: தினகரன் செய்தி எதிரொலியாக ரிஷிவந்தியம் அருகே வேரோடு சாய்ந்த ஆலமரம் அகற்றப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தை அடுத்த லா-கூடலூர் ஊராட்சிக்குட்பட்ட சேரந்தாங்கல் கிராமத்தின் ஏரிக்கரையில் முனியப்பன் கோயில் அருகில் உள்ள மிகப்பழமை வாய்ந்த ஆலமரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென வேரோடு அருகிலுள்ள முனியப்பன் கோயில் மீது மரம் சாய்ந்தது. இதில் முனியப்பன் கோயிலின் சுற்றுச்
சுவர், கோயில் சிலைகள் சேதமடைந்தன. இந்த  பழமை வாய்ந்த ஆல மரம் வெயில், மழை காலங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு ஓய்விடமாக இருந்து வந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மழை பெய்ததால் ஆலமரத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டது.  உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மரத்தை அகற்றி போக்குவரத்து சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து கடந்த 16ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து சாலையில் விழுந்து கிடந்த ஆலமரத்தை வருவாய்த்துறை மற்றும் லா-கூடலூர் பஞ்சாயத்து சார்பில் அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.


Tags :
× RELATED ரூ 1.20 லட்சம் மதிப்பிலான புதுவை மதுபாட்டில்கள் பறிமுதல்