×

சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணி

விழுப்புரம், ஜூலை 18:  விழுப்புரத்தில் உலக நீதிதினத்தையொட்டி சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணி நடந்தது. இந்திய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்திட்டத்தின்படி சர்வதேச உலக நீதிதினம் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி அரசு சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி தலைமை தாங்கி துவக்கிவைத்தார். தொடர்ந்து சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள் ராமகிருஷ்ணன், எழில், சுஜாதா, முத்துக்குமரவேல், வெங்கடேசபெருமாள், மோகன், கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திருட்டு, வழிப்பறி வழக்கில்...