பழுதாகி நின்ற பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதி விபத்து

உளுந்தூர்பேட்டை,  ஜூலை 18: உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சி என்ற இடத்தில் திருச்சி தேசிய  நெடுஞ்சாலையோரம் பழுதான தனியார் ஆம்னி பேருந்து நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த  மற்றொரு தனியார் ஆம்னி பேருந்து நின்று கொண்டு இருந்த பேருந்து மீது மோதி  விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் வந்த பிரகாஷ்(31), பாண்டியராஜன்(23),  தமிழரசன் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். உடன் அங்கிருந்தவர்கள்  அவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து எடைக்கல் காவல்நிலைய  சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.Tags :
× RELATED ரூ 1.20 லட்சம் மதிப்பிலான புதுவை மதுபாட்டில்கள் பறிமுதல்