பைக் மோதி முதியவர் பலி

உளுந்தூர்பேட்டை,  ஜூலை 18:  உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கிராமத்தை சேர்ந்தவர்  பாவாடைசாமி மகன் சிவானந்தம்(60) இவர் சம்பவத்தன்று வீரபெருமாநல்லூர்  கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன்(29) என்பவருடன் தேவியானந்தல் பேருந்து  நிறுத்தம் அருகில் ரோட்டின் ஓரமாக நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது  அந்த வழியாக சென்ற பைக் இரண்டு பேர் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.  இதில் இரண்டுபேரும் தலையில் படுகாயம் அடைந்தனர். உடன் அங்கிருந்தவர்கள்  இரண்டு பேரையும் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி  சிவானந்தம் உயிரிழந்தார்.

Advertising
Advertising

Related Stories: