சித்தால் அரசு மாதிரி பள்ளியில் சைக்கிள் மேற்கூரை அமைக்க வேண்டும்

ரிஷிவந்தியம், ஜூலை 18:  ரிஷிவந்தியம் அடுத்த சித்தால் கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி 2010ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு 525 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 14 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 4 பணியிடங்கள் காலியாக உள்ளது. சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இப்பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கவில்லை. இதனால் இந்த பள்ளி மைதானத்தின் அருகே சித்தால் தைலங்காடு இருப்பதால் மாணவ, மாணவிகள் அச்சத்தில் உள்ளனர். மேலும், சிங்காரப்பேட்டை - சித்தால் இடையேயான சாலையில் இந்த பள்ளி அமைந்துள்ளது. இதனால் பல வகையிலும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இப்பள்ளியில் மேற்கூரை இல்லாததால் வெயிலிலும், மழையிலும் சைக்கிள்கள் நிறுத்தப்படுகின்றன. எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி சைக்கிள் நிற்க மேற்கூரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை

வைத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: