பரட்டை தலைமுடியுடன் வந்த மாணவர்களுக்கு சிகை அலங்காரம்

மயிலம், ஜூலை 18: பாதிராப்புலியூர்  அரசு மேல்நிலைப்பள்ளியில்  ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று  பள்ளிக்கு பரட்டை தலை முடி யுடன் வந்த மாணவர்களை அழைத்து நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சிகை அலங்காரம் செய்ய ஆசிரியர்கள் ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து திட்ட அலுவலர் ஆசிரியர் பஞ்சாட்சரம் மாணவர்களை கண்காணித்தார். இதில் சுமார் 30 பேர் பரட்டை தலையுடன் ஒழுங்கீன்றி பள்ளிக்கு  வருகை தந்தனர். அந்த மாணவர்களுக்கு பள்ளி சார்பில்  சிகை அலங்காரம் செய்ய முடிவு செய்து சிகை அலங்கார நிபுணரான அதே ஊரை சேர்ந்த வெங்கடாசலத்தை  வரவழைத்து மாணவர்களுக்கு சிகை அலங்காரம் செய்தனர். மாணவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு பெற்றோர்கள் சார்பிலும் ஆசிரியர்களின் புரட்சிகரமான செயலை வரவேற்று பாராட்டினர்.  இதில் பள்ளி தலைமை ஆசிரியர்  அமிர்தலிங்கம் ஆசிரியர்கள் தமிழரசி, ஆனந்தசெல்வி  ஆகியோர் கலந்து கொண்டனர் .

Advertising
Advertising

Related Stories: