அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ 50.84 லட்சம் மேல்மலையனூர்

செஞ்சி, ஜூலை 18: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா கோயில்தலமாக விளங்குகிறது. இந்த கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபடுகின்றனர். மேலும் மாதந்தோறும் இந்த கோயிலில் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் பிரசித்தி பெற்றதாகும். விழாவில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, சென்னை, வேலூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற  காணிக்கையாக பணம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை செலுத்தி வருகின்றனர்.இந்த மாத உண்டியல் எண்ணிக்கை கோயில் வளாகத்தில் நடந்தது. இதில் பக்தர்கள் ரூ50 லட்சத்து 84 ஆயிரத்து 011 மற்றும் தங்கம் 395 கிராம், வெள்ளி 675 கிராம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணிக்கையின் போது இந்து சமய அறநிலையத்துறை துணை இணையர் மேல்மலையனூர் ராமு, விழுப்புரம் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் செல்வம், அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், பெருமாள், கணேசன், சரவணன், சேகர், மற்றும் கண்காணிப்பாளர் வேலு, மேலாளர் மணி, ஆய்வாளர் அன்பழகன் உடன் இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வளத்தி போலீசார் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: