மணல் கடத்திய 7 பேர் கைது 10 மாட்டு வண்டி பறிமுதல்

உளுந்தூர்பேட்டை,  ஜூலை 18: உளுந்தூர்பேட்டை பகுதியில் மணல் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்து 10 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். உளுந்தூர்பேட்டை காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோபி, ராஜமன்னார்  மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டனர். அப்போது களவனூர் ஆற்றில் அனுமதியின்றி டயர் மாட்டு  வண்டிகள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட செங்குறிச்சி மற்றும் களவனூர்  கிராமத்தை சேர்ந்த சக்கரபாணி, அருண்பாண்டியன், முருகன், அய்யனார், மதுரை,  வெங்கடேசன், சேகர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய  பாலகிருஷ்ணன், பாஸ்கர், மணி ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர். அரசு  அனு

மதியின்றி மணல் கடத்திய 10 டயர் மாட்டுவண்டிகளை போலீசார் பறிமுதல்  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertising
Advertising

Related Stories: