பெண்ணிடம் ஆபாச பேச்சு

வில்லியனூர், ஜூலை 18:   வில்லியனூர் அருகே தொழிலாளி மனைவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசியது தொடர்பாக பேக்கரி உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.  வில்லியனூர் அடுத்த கூடப்பாக்கம் பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் அய்யப்பன் (33). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த முருகன், கூடப்பாக்கத்தில் பேக்கரி வைத்துள்ளார். அய்யப்பன் மனைவியிடம் முருகன் செல்போனில் ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதையறிந்த அய்யப்பன், முருகனை கண்டித்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதையடுத்து, வில்லியனூர் காவல் நிலையத்தில் அய்யப்பன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிந்து முருகனை தேடி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: