இவ்வாறு அதில் கூறியுள்ளார். சம்மேளன தலைவருக்கு பிடிடிசி சேர்மன் சவால்

புதுச்சேரி, ஜூலை 18:   புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக (பிடிடிசி) சேர்மன் எம்என்ஆர்.பாலன் எம்எல்ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டி:சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை பற்றி கடந்த சில மாதங்களாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. நேற்று கூட அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன் பல குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அவருக்கு பதில் கூற வேண்டிய கடமையும், கட்டாயமும் எனக்கு இருக்கிறது. பொய்யை திரும்பத் திரும்ப கூறினால் அது உண்மையாகி விடாது. பிடிடிசி இப்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு எந்த முறைகேடும் நடக்கவில்லை. இது பற்றி பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் முன்னிலையில் பாலமோகனன் என்னுடன் விவாதிக்கத் தயாரா? அதற்கான தேதியை அவரே முடிவு செய்து விட்டு தகுந்த ஆதாரத்துடன் வரட்டும்.  சுண்ணாம்பாறு படகு குழாம் உதவி மேலாளர், சட்டப்படிதான் நியமிக்கப்பட்டிருக்கிறார். குறுக்குவழியில், கொல்லைப்புறமாக ஒருவரைக்கூட நான் இதுவரை நியமிக்கவில்லை. 4 மாதத்திற்கு ஒருமுறை போர்டு மீட்டிங் நடத்தப்படும். ஆனால் அதில் சுற்றுலாத்துறை இயக்குனரும், செயலரும் பங்கேற்பது இல்லை. மூட வேண்டிய நிலையில் இருந்த பிடிடிசி, நான் சேர்மனாக பொறுப்பேற்ற பின் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வருடத்துக்கு ரூ.24 கோடி வருமானம் கிடைக்கிறது. 18 மாதங்களில் ஜிஎஸ்டியாக ரூ.3 கோடி செலுத்தி இருக்கிறோம். தொழிலாளர் வைப்பு நிதியாக (இபிஎப்) ரூ.1.69 கோடி செலுத்தியிருக்கிறோம். பணிக்கொடை ரூ.75 லட்சம் கொடுத்திருக்கிறோம். தனியார் படகு குழாமிற்கான அனுமதியை நான் கொடுக்கவில்லை, சுற்றுலாத்துறை தான் கொடுத்தது. அங்கு சென்று கேட்க வேண்டியது தானே? அங்கு போராட்டம் நடத்த வேண்டியது தானே? உண்மையில் தனியார்மயத்துக்கு எதிராக நான் தான் போராடினேன். தனியார் படகு குழாமில் இருந்து பாரடைஸ் பீச்சுக்கு படகுகள் இயக்க நான் சேர்மனராக இருக்கும் வரை அனுமதி கொடுக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: