ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஜூலை 18:   மத்திய அரசு பட்ஜெட்டை கண்டித்து புதுவையில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மத்திய அரசின் மக்களுக்கு விரோதமான பட்ஜெட்டை கண்டித்தும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான நிலையை எதிர்த்தும் புதுவை மாநில ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார். இதில் மாநில துணைத் தலைவர்கள் கலியபெருமாள்,  சந்திரசேகரன், ரவி, செயலாளர்கள் தயாளன் என்ற பூபாலன், செந்தில்முருகன், ரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏஐடியுசி செயல் தலைவர் அபிஷேகம் போராட்டத்தை முடித்து வைத்தார்.

Advertising
Advertising

Related Stories: