புதுவை- கடலூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி, ஜூலை 18:    புதுச்சேரி போக்குவரத்து (வடக்கு- கிழக்கு பிரிவு) எஸ்பி முருகவேல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி நைனார்மண்டபம் ஸ்ரீநாக முத்துமாரியம்மன் கோயில் 36வது செடல் திருவிழா நாளை (19ம் தேதி) நடக்கிறது. இதனை முன்னிட்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் வசதிக்காக நாளை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடலூரில் இருந்து புதுச்சேரி பேருந்து நிலையம் வரும் பேருந்துகள், வேன் மற்றும் கார்கள் தவளக்குப்பம் சந்திப்பில் இருந்து இடதுபக்கம் திரும்பி அபிஷேகபாக்கம் வழியாக சென்று, வில்லியனூர் பைபாஸ் கூடப்பாக்கம் வழியாக பத்துக்கண் அடைந்து, ராஜீவ்காந்தி சிலை வழியாக புதுச்சேரி பேருந்து நிலையம் அடைய வேண்டு–்ம.  அதேபோல், புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து கடலூர் செல்லும் வாகனங்கள் இந்திராகாந்தி சிலை, பிச்சவீரன்பேட் வழியாக வில்லியனூர் கரிக்கலாம்பாக்கம் அபிஷேகப்பாக்கம் வழியாக கடலூர் சாலை அடைந்து கடலூர் செல்ல வேண்டும். எனவே கோயிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த புதிய தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.  

Related Stories: