மக்களின் குறைகளை தீர்க்க தொகுதி தோறும் முகாம்கள்

புதுச்சேரி,  ஜூலை 18:   புதுச்சேரியில் அரசின் சேவைகளை துரிதமாக மக்கள் பெறும் வகையில்  அவர்களின் குறைகளை தீர்க்க தொகுதி தோறும் முகாம் நடத்தப்படுவதாக  சப்-கலெக்டர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக புதுச்சேரி சப்-கலெக்டர் சக்திவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு:- பொதுமக்கள் அரசு சேவைகளை துரிதமாக மற்றும் சுலபமாகவும் பெற, துறை சார்ந்த  தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யவும், குறைத்தீர்வு முகாம் நடத்தப்பட  இருக்கிறது. இதுதொடர்பாக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தலைமையில் புதுச்சேரி  தலைமை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கு பெற்ற கலந்தாய்வு கூட்டம்  கடந்த வாரம் நடைபெற்றது.

 இதில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில்  அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்  நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும் அந்த குறைத்தீர்வு கூட்டம்  “மக்கள் குரல்” என்ற தலைப்பில் புதுவை மாநிலத்தில் தொகுதி ேதாரும்  நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக நலத்துறையுடன் இணைந்து  நெட்டப்பாக்கத்தில் நேற்று முகாம் நடைபெற்றது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: