×

பண்ருட்டியில் ஐஸ்வர்யா ஹோம் நீட்ஸ் புதிய ஷோரூம் திறப்பு

பண்ருட்டி, ஜூலை 18:  பண்ருட்டி பேருந்து நிலையம் பின்புறம் புதிய ஐஸ்வர்யா ஹைடெக் ஷோரூம் திறப்பு விழா நடந்தது. இதில் பண்ருட்டி முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு புதிய ஷோரூமை திறந்து வைத்தார். ஓய்வு பெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மேலாளர் ஐயனார், ஓய்வு பெற்ற தோட்டக்கலை அலுவலர் ரவிசேகர், ஐஸ்வர்யா ஹோம் நீட்ஸ் உரிமையாளர் ராஜ்மோகன், ஷர்மிளாராஜ்மோகன், விஜய் ஆகியோர் விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றனர். திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு சலுகை விலையில் பொருட்கள் விற்பனை நடந்தது. விழாவில், மாவட்ட வர்த்தக சங்க தலைவர் சண்முகம், நகை கடை தொழிலதிபர்கள் வைரகண்ணு, தேவநாதன், வைஷ்ணவி டிஜிட்டல் சுரேஷ்பாபு, ஜோதி கலர்லேப் காமராஜ், அரிமா சங்க நிர்வாகிகள் சுப்ரமணி, வீரப்பன், மாசிலாமணி, ராமச்சந்திரன், எத்திராஜ், சுகுமார்காந்தி, சுவாமிநாதன், ஆர்சி திருமண மகால் உரிமையாளர் சந்திரசேகர், ரோட்டரி சங்க தலைவர் வீரப்பன், எக்ஸ்னோரா தலைவர் பசுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது