×

100 நாள் வேலை திட்டத்தில் நிதி குறைப்பு நாமத்துடன் பிச்சை எடுத்து விவசாயிகள் போராட்டம்

செய்யாறு, ஜூலை 18: 100 நாள் வேலை திட்டத்தில் நிதி குறைக்கப்பட்டதை கண்டித்து செய்யாறில் விவசாயிகள் நாமம் போட்டு, பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஆர்டிஓ அலுவலகம் எதிரே நேற்று, உழவர் பேரவை சார்பில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாமம் போட்டு, பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 100 நாள் வேலை திட்ட நிதி ₹1,000 கோடி அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 8 கோடி மனித உழைப்பு குறையக்கூடிய வாய்ப்புள்ளது. கடுமையான வறட்சியை கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலையை 150 அல்லது 200 நாட்கள் உயர்த்தி வேலை வழங்குவோம் என அறிவித்த கட்சிகள் வாய்மூடி கொண்டுள்ளது. எனவே இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகத்திற்காக மட்டும் ₹6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். வேளாண்மைத்துறை நிதி 2.50 சதவீதத்தை 35 சதவீதமாக உயர்த்தி, மீன், கோழி, ஆடு பண்ணை, கலப்பு பண்ணை திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். கடும் வறட்சியால் மணிலா விதைப்பு முளைப்பு திறன் இழந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என விவசாயிகள் கோஷமிட்டனர்.

Tags :
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...