50 சதவீதத்திற்கும் குறைவான தண்ணீர் போதும் நவீன தொழில்நுட்பத்தில் நெல்சாகுபடி விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

தா.பேட்டை, ஜூலை 16: முசிறி அருகே நவீனதொழில்நுட்ப மூலம் தரிசு நிலத்தில் நெல்சாகுபடி செய்யும் முறை குறித்து விசாயிகள் மத்தியில் ஏரோபிக் நெல் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.முசிறி தாலுகா கொள்ளுகட்டிபாளையம் கிராமத்தில் சேற்று உழவு இல்லாமலும், நாற்றுநடும் முறை இல்லாமலும் நெற்பயிர் சாகுபடி செய்யும் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது தரிசு நிலத்தில் நவீன இயந்திரத்தின் மூலம் விதைநெல் விதைக்கப்பட்டது. பின்னர் தண்ணீர் விடும் முறை மற்றும் பராமரிப்புகள் குறித்து விவசாயிகள் மத்தியில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் நெல் சாகுபடி செய்வதால் 50 சதவிகிதத்திற்கும் குறைவான தண்ணீர் போதும் என்பதால் விவசாயிகள் மத்தியில் இம்முறையில் சாகுபடி செய்வது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: