திருச்சி தென்னூர் உள்ள காவேரி மருத்துவமனையில் தீப்புண் தீவிர சிகிச்சை பிரிவு திறப்பு

திருச்சி, ஜூலை 16:திருச்சி தென்னூர் காவேரி மருத்துவமனையில் தீப்புண் தீவிர சிகிச்சை பிரிவு நேற்று துவங்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.தேசிய ஒட்டறுவை மருத்துவ தினமான நேற்று திருச்சி காவேரி மருத்துவமனையில் அதி நவீன தீப்புண் தீவிர சிகிச்சை பிரிவை முக எலும்பியல் அறுவை மருத்துவத்துறை தலைவர் டாக்டர் ஜகன்மோகன் தொடங்கி வைத்தார். காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் செங்குட்டுவன், பேராசிரியர் கார்த்திகேயன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒட்டறுவை துறைத்தலைவர் டாக்டர் எஸ். ஸ்கந்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.தீப்புண் தீவிர சிகிச்சை பிரிவு குறித்து காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் செங்குட்டுவன் கூறும்போது, காவேரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு நவீன நலம் பேணலை வழங்குவதற்கு இப்போது நவீன உபகரணங்கள் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவை முழுமையாக உள்ளது. வயது வந்தோருக்காக தென்னூரில் 2 யூனிட்டுகளையும், கண்டோன்மெண்டில் குழந்தைகளுக்கு 2 யூனிட்டையும் கொண்டுள்ளது. இதன் மூலம் அதிகமான நோயாளிகளை காப்பாற்ற முடியும், மிகவும் கடினமான நேர்வுகளை மீட்க முடியும்’ என்றார்.

தென்னூர் காவேரி மருத்துவமனை கிளைத்தலைவர் அன்புசெழியன் கூறும்போது, காவேரி மருத்துவமனையில் நோயாளிகளுக்குமுழுமையான மரபுவழியில் சிகிச்சை அளிப்பதற்கு ஆழ்ந்த அறிவைக்கொண்ட நிபுணர்களின் முக்கிய குழு எங்களிடம் உள்ளது’ என்றார்.தீக்காயம் ஏற்பட்டால் அவர்கள் மீது மணல் போடுவது, மாவு தடவுவது, இங்க் தடவுவது போன்ற செயல்களை செய்யக்கூடாது. இப்படி செய்வதால் தீக்காயத்தின் பாதிப்பு தன்மையை அறிய மருத்துவர்களுக்கு நேரம் எடுக்கிறது. தீக்காயம் ஏற்பட்டவர்கள் மீது சாதரான நீரை ஊற்றினால் போதும், அப்படி ஊற்றும் போது கொப்புலங்கள் வந்தால் அவற்றை உடைத்துவிடாமல் மருத்துவரிடம் அணுகினால் தீக்காயத்தின் பாதிப்பு தன்மையை அடைந்து உடனடியாக உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: