×

தா.பேட்டை அருகே கோயில் சிசிடிவி கேமராவை உடைத்த வாலிபர் கைது

தா.பேட்டை, ஜூலை 16: தா.பேட்டை அருகே தும்பலம் கிராமத்தில் உள்ள செல்லாண்டிஅம்மன் கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமிராவை நள்ளிரவில் உடைத்து சேதபடுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.தா.பேட்டை அருகே தும்பலம் கிராமத்தில் ஊரின் எல்லையில் செல்லாண்டி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பாதுகாப்பிற்காக 6 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் வாலிபர் ஒருவர் முகமுடி அணிந்தவாறு கண்காணிப்பு கேமிராவை உருட்டுக்கட்டையால் உடைத்து நொறுக்கும் காட்சி பதிவாகியிருந்தது. இதுகுறித்து கிராமத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் தா.பேட்டை முஸ்லிம் தெருவை சேர்ந்த அப்துல்காலித்(25) என்ற வாலிபர் கேமரா உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து வாலிபரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் கண்காணிப்பு கேமராவை உடைத்து சேதப்படுத்தியதை ஒப்புகொண்டார். இதையடுத்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து அப்துல்காலித்தை கைது செய்தனர்.

தீயில் கருகி நகை தொழிலாளி சாவு: திருச்சி பெரியகடை தெரு சந்துகடை சவுந்திரபாண்டியன்பிள்ளை தெருவை சேர்ந்தவர் கணேஷ்குமார்(41), நகை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி அசன்பானு(37). நேற்று முன்தினம் அசன்பானு சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது ஸ்டவ்வில் மண்ணெண்ணெய் குறைவாக இருந்ததால், கணவரை கெரசின் எடுத்து வரும்படி கூறினார். அவர் கேனில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து வந்தபோது இடறி விழுந்தார். இதில் கேனில் இருந்த மண்ணெண்ணெய் கொட்டியதில் கணேஷ்குமார் உடலில் மண்ணெண்ணெய் பரவி தீப்பற்றியது. இதில் உடல் கருகிய கணேஷ்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணேஷ்குமார் இறந்தார். இது குறித்து வழக்குப்பதிந்த கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.செல்போன் பறித்த 2 பேர் கைது: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசூரை சேர்ந்தவர் சரவணன்(39). இவர் நேற்று முன்தினம் திருச்சி-சென்னை பைபாஸ் சாலை பழைய பால்பண்ணை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்ேபாது அந்த வழியே வந்த 2 பேர் சரவணனின் ெசல்போனை பறித்துக்கொண்டு ஓடினர். இதைபார்த்த அப்பகுதியினர் அவர்களை பிடித்து காந்தி மார்க்கெட் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சி பூக்கொல்லையை சேர்ந்த நிவாஸ்பாபு(22), சுப்ரமணியபுரம் ராஜாதெருவை சேர்ந்த சிராஜுதீன்(21) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.ரங்கம் ரவுடி கைது: புதுக்கோட்டை மாவட்டம வடக்கு 4வது வீதியை சேர்ந்தவர் சிம்பு(எ)சிலம்பரசன்(29). இவர் தற்போது திருச்சி உறையூர் நாச்சியார்கோவில் அருகே தங்கியிருந்து தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம்  ரங்கம் நரியன் தெரு பிரபல ரவுடி கவுரிசங்கர் (30) என்பவர் கடைக்கு சென்று  மாமுல்  கேட்டு உள்ளார்.

 அதற்கு சிம்பு பணம் தர முடியாது என கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவுரிசங்கர், சிம்புவை தாக்கி கல்லாவில் இருந்த ரூ.4 ஆயிரத்தை அள்ளிச்சென்று விட்டார். இது குறித்து உறையூர் போலீசில் சிம்பு புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து கவுரிசங்கரை கைது செய்தார். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 15 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.மணல் திருடிய 5 பேர் கைது: லால்குடியை அடுத்த கே.வி.பேட்டை மீனவர் காலனி பகுதியை சேர்ந்த மணி மகன் கலியபெருமாள்(45), சுந்தர்ராஜ் மகன் கருணாநிதி(23), ராஜூ மகன் அஜித்(20), ஆரோக்கியதாஸ் மகன் திலீபன்(22), ரவிச்சந்திரன் மகன் சிவசந்திரன்(20) ஆகியோர் தங்களது சொந்த வீட்டு வேலைக்காக கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் 3 மொபட் மற்றும் லோடு ஆட்டோவில் மணல் ஏற்றி வந்துள்ளனர். லால்குடி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், எஸ்ஐ உதயகுமார், ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது தகவல் கிடைக்கவே விரைந்து சென்று மடக்கி பிடித்தனர். இதில் மணல் ஏற்றி வந்ததில் பயன்படுத்திய 3 மொபட் மற்றும் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து கலியபெருமாள், கருணாநிதி, அஜித், திலீபன், சிவச்சந்திரன், ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்களை லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லால்குடி கிளை சிறைக்கு அனுப்பி வைத்தனர்.லாரி மீது பஸ் மோதி 5 பேர் காயம்: தூத்துக்குடியில் இருந்து திருச்சிக்கு அரசு பஸ் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது. பஸ்ைச விளாத்திகுளத்தை சேர்ந்த டிரைவர் செல்வராஜ்(32) ஓட்டி வந்தார். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பசுமை பூங்கா அருகே வந்தபோது முன்னால் சென்ற டாரஸ் லாரியை பஸ் முந்த முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரி மீது, பஸ் மோதியது.

இதில் பஸ் டிரைவர் செல்வராஜ் மற்றும் பயணிகள் விருதுநகர் ஹரிஹரன்(24), நாகராஜன்(24), சக்தி(29), திருநெல்வேலி கணேசன்(30) ஆகியோர் காயமடைந்தனர். அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து லாரி டிரைவர் தூத்துக்குடி முருகேசன் (35) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அரசு பஸ் டிரைவர் செல்வராஜ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.ரயில் நிலைய வளாகத்தில் சூதாடிய 5 பேர் கைது: திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்தில் சுமை தூக்குவோர் தங்குவதற்காக ஒரு அறை உள்ளது. அந்த அறையில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக கன்டோன்மென்ட் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்ஐ சுலோசனா மற்றும் போலீசார் அந்த அறைக்கு ெசன்றனர்.அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டம் நடந்தது தெரியவந்தது. சூதாட்டத்தில் ஈடுபட்ட மணிகண்டன்(40), கணபதி(31), முருகேசன்(58), சந்திரசேகர்(31), கோவிந்தராஜ்(37) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதில் மணிகண்டன் மட்டும் சுமை தூக்கும் தொழிலாளர். மற்றவர்கள் இவரது நண்பர்கள். இவர்களிடமிருந்து ரொக்கம் ரூ.4,925 பறிமுதல் செய்யப்பட்டது.குண்டாசில் 2 ரவுடிகள் கைது: துறையூர் விநாயகர் தெருவை சேர்ந்தவர் முருகேசன். அவரது மகன்கள் பார்த்திபன்(26), மதன்குமார்(24). இவர்கள் இருவர் மீதும் வழிப்பறி, கொலை மிரட்டல், கொலை முயற்சி, அடிதடி என பல வழக்குகள் உள்ளன. கடந்த 4ம் தேதி ஒரு அடிதடி வழக்கில் இருவரையும் துறையூர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தொடர்ந்து இவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் துறையூர் இன்ஸ்பெக்டர் குருநாதன், முசிறி டிஎஸ்பி தமிழ்மாறன், திருச்சி எஸ்பி ஜியாவுல்ஹக் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். இதன் பேரில்சிவராசு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் தடுப்புக் காவலில் வைக்க நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து அடைக்கப்பட்டனர்.

இளம்பெண் மாயம்: புதுக்கோட்டை பீதாம்பட்டி மேலத்தெருவை சேர்ந்த ரெங்கசாமி மகள் காஞ்சனா(27). இவர் திருச்சி விமான நிலையம் எதிரில் வயர்லெஸ் சாலையில் உள்ள ஒரு கன்சல்டன்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 11ம் தேதி வேலைக்கு வந்த காஞ்சனா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. வேலை பார்க்கும் நிறுவனம், உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடியும் காஞ்சனா பற்றி எந்த விவரமும் கிடைக்கவில்லை.இது குறித்து ரெங்கசாமி ஏர்போர்ட் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் எஸ்ஐ வீரசிங்கம் வழக்குப்பதிந்து காஞ்சனாவை தேடி வருகிறார்.தொழிலாளி தற்கொலை: ரங்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சேகர்(45), கூலித்ெதாழிலாளி. இவருக்கு காசநோய் இருந்துள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 12ம் தேதி விஷம் குடித்து மயங்கினார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேகர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து ரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி