18,19ல் இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

திருச்சி, ஜூலை 16: திருச்சியில் கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்சி மையத்தில் 2 நாட்கள் இலவச கறவை மாடு பயிற்சியில் விருப்பமுள்ளோர் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் முதல்வர் ரிச்சர்டு ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி கொட்டப்பட்டு கோழிபண்ணை சாலையில் உள்ள கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்சி மையம் செயல்படுகிறது. இங்கு வரும் 18 மற்றும் 19ம் தேதி ஆகிய 2 நாட்கள் இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது. இதில் தரமான கறவை மாடுகளைத்தேர்ந்தெடுக்கும் முறைகள், முறையான பராமரிப்பு, செயற்கை முறை கருவூட்டல், தீவன மேலாண்மை, கன்று பராமரிப்பு, நோய்தடுப்பு முறகைள், மடிநோய் தடுப்பு முறைகள், தீவன புற்கள் சாகுபடி, தீவன மரங்கள் வளர்ப்பு பற்றிய முறைகள், ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட உள்ளது. அதன்படி இந்த பயிற்சியில் சேர் விரும்புவோர் 18ம் தேதி காலை 10 மணிக்குள் நேரில் வரவேண்டும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

Related Stories: