பெல் ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்

திருவெறும்பூர், ஜூலை 16: லாப போனஸ் கேட்டு தொழிற்சங்கங்களை சேர்ந்த பெல் ஊழியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவெறும்பூர் அருகே பெல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு பெல் நிர்வாகம் உற்பத்தி லாப போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தின் கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் தீபன் தலைமையில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், பெல் நிர்வாகம் அதற்கு செவிசாய்க்காத நிலையில் அடுத்தகட்ட போராட் டமாக நேற்று முதல் மெயின் கேட் முன், தொமுச, அம்பத்கர் யூனியன், சிஐடியூ, பிஎம்எஸ், ஏடிபி, ஏஐடியூசி ஆகிய தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் 6 பேர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Advertising
Advertising

Related Stories: