7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜூலை 16: ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஓய்வூதியர்கள் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஓய்வூதிய சட்ட விதிகளை முறையாக அமல்படுத்த வேண்டும். ஊதிய திருத்தம் செய்யும்போது ஓய்வூதியத்தையும் திருத்தம் செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோாிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்திய வங்கி ஓய்வூதியர் மற்றும் பணி மூப்படைந்தோர் சங்கங்களின் கூட்டமைப்பினர் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Advertising
Advertising

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் சங்க பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோ ராஜேந்திரதேவ் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் இணை செயலாளர் சரவணமுத்து, துணைத்தலைவர்கள் சற்குணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: