அறம் மக்கள் நலச்சங்கத்தின் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா

திருச்சி, ஜூலை 16: திருச்சியில் அறம் மக்கள் நலச்சங்கத்தின் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து, இ.பி.ரோடு மதுரம் மாநகராட்சி பள்ளியில் அறம் மக்கள் நல சங்கம் சார்பாக 10 மின்விசிறியும் 3 ஸ்டீல் பீரோ மற்றும் 1 புரொஜக்டர், 1 எல்இடி டிவி, 250 மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவாக பிரியாணியும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், சிறப்பு அழைப்பாளராக சங்க தலைவர் ராஜா மற்றும் மாநில பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் கலந்துகொண்டனர். மேலும் தொழிலதிபர் ஜெய்கர்ணா, சங்க ஆலோசகர் பிரபாகரன், சட்ட ஆலோசகர் தங்கதுரை, மாநில நிர்வாகிகள் சாகுல்ஹமீது, இளங்கோவன், அப்துல்ரஹீம், பாலமுருகன், கோவிந்தராஜ், பாபு, தலைமை நிலைய மேலாளர் சுந்தர்ராஜ், ஆனந்த், பஷீர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆல்பர்ட்ராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Advertising
Advertising

Related Stories: