செவித்திறன் குறை உள்ளோருக்கான பயிற்சி மையத்தை நிர்வகிக்க அழைப்பு

திருவாரூர், ஜூலை 16: திருவாரூரில் இயங்கி வரும் செவித்திறன் குறை உள்ளவர்களுக்கான பயிற்சி மையத்தினை நிர்வாகத்திட தகுதி உடைய தொண்டு நிறுவனத்தினர் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,திருவாரூர் நகரில் இயங்கிவரும் நகராட்சியின் சபாபதி முதலியார் உயர்நிலை பள்ளி வளாகத்தில் செவித்திறன் குறைவுடையயோர்க்கான ஆரம்ப கால பயிற்சி மையம் இயங்கி வருகிறது. 20 சிறார்களை கொண்டு இயங்கி வரும் இந்த ஆரம்ப கால பயிற்சி மையத்தினை நிர்வாகி ஆர்.பி.டி சட்டம் 2016ன் கீழ் பதிவு பெற்ற தகுதி உடைய தொண்டு நிறுவனத்தினர் விண்ணப்பிக்கலாம். எனவே தகுதியுடையவர்கள் வரும் 31ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

× RELATED விழிப்புணர்வு முகாமில் வலியுறுத்தல்...