மன்னார்குடியில் லோக்அதாலத் 20 வழக்குகளுக்கு ரூ.71 லட்சத்திற்கு தீர்வு

மன்னார்குடி, ஜூலை16: மன்னார்குடியில் நடைபெற்ற லோக்அதாலத் நீதிமன்றத்தில் 20 வழக்கு களு க்கு தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக ரூ. 71 லட்சத்து 10 ஆயிரம் பெறப் பட்டது. மேலும் விவாகரத்து வழக்கில் இரு தம்பதியினர் சமரசம் செய்து சேர்த்து வைக்கப்பட்டனர்.உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின் பேரில் லோக்அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நாடு முழுவதும் நடைபெற்றது. அதன்படி மன்னார்குடி சார்பு நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி பிரேமாவதி தலைமையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் ராம கிருஷ்ணன், தமிழரசன், உதயகுமார், கலந்து கொண்டனர்.தாலுகா அளவில் 2732 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மோட் டார் வாகன விபத்து இழப்பீடு, குடும்பநல வழக்கு, உரிமையியல் வழக்குகள் என 51 வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 20 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக ரூ. 71 லட்சத்து 10 ஆயிரம் பெறப்பட்டது.

மேலும் மன்னார்குடி அடுத்த சேரன்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெயசக்தி வேல், விஜயகுமாரி தம்பதியினரும், மேலநத்தம் ஜெயராஜ், ரூபிமேரி ரோஸ்லின் அனிதா ஆகிய இரு தம்பதியினரும் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தனர். இவ்வழக்குகள் கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற லோக்அதாலத் நீதி மன்றத்தில் இருதம்பதியினரை சார்பு நீதிபதி பிரேமாவதி சமரசம் செய்து ஒன்றாக சேர்த்து வைத்தார்.


Tags :
× RELATED மின்மய பணிகள் முடிவுற்றதால்...