விவாகரத்து வழக்கில் இரு தம்பதியினர் சேர்த்து வைப்பு மக்கள் குறைதீர் கூட்டம் 271 மனுக்கள் குவிந்தன

திருவாரூர், ஜூலை 16: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டுதல், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கல்விக் கடன் வழங்க வேண்டும், இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், முதியோர் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 271 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறையினரிடம் அந்த மனுக்களை வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார். இதில் டிஆர்ஓ பொன்னம்மாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டஇயக்குனர் தெய்வநாயகி, உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED நீடாமங்கலம் பகுதியில் அறுவடைக்கு...