அரசு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

திருத்துறைப்பூண்டி, ஜூலை16: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள்கல்வி வளர்ச்சி நாளாக பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமைஆசிரியர் பாலு தலைமைதாங்கினார்.பேராசிரியர் அப்துல் மாலிக் கலந்து கொண்டு பேசினார். தொடர்ச்சியாக காமராஜர் பற்றிய பேச்சுப்போட்டி கவிதை கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஐயப்பன் நன்றிகூறினார்.மாணவ,மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள்விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. பள்ளிதலைமையாசிரியர் திருமாறன் தலைமைவகித்தார்,  உடற்கல்விஇயக்குனர் பாலமுருகன் காமராஜர் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார் . முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா தலைமையாசிரியர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர் சொக்கலிங்கம் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசு வழங்கினார்.


Tags :
× RELATED மின்மய பணிகள் முடிவுற்றதால்...