திருவாரூர் புதிய கல்விக் கொள்கையினை முற்றிலுமாக கைவிடக் கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 22ம் தேதி ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூலை 15 : புதிய கல்விக் கொள்கையினை முற்றிலுமாக கைவிடக் கோரி வரும் 22ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவாரூரில் நேற்று மாவட்ட துணைத்தலைவர் சத்ய நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஈவேரா, , மாவட்ட பொருளாளர் சுபாஷ் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் நடப்பாண்டில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப நடைபெற்று வரும் ஆசிரியர் பணிநிரவல் தொடர்பாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர் மற்றும் மன்னார்குடி கல்வி மாவட்ட அதிகாரிகளுக்கு இடையே பல்வேறு முரண்பாடுகள் இருந்து வருகின்றன.

 குறிப்பாக ஒரு பள்ளியில் கடந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப தான் பணிநிரவல் என்றும் மற்றொரு பள்ளியில் நடப்பு ஆண்டு மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப பணிநிரவல் என்றும் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதால் இந்த குளறுபடிகளை தீர்க்க வேண்டும், பணப்பலன்கள் தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வட்டார கல்வி அலுவலர்களுக்கு கணினி ஆபரேட்டர் பணி நியமனம் செய்திட வேண்டும், புதிய கல்விக் கொள்கையினை முற்றிலுமாக கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22ம் தேதி திருவாரூரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED எல்லை பிரச்னையால் விடுபட்டு போன 500மீ...