கோட்டூர் அருகே வாய்க்கால்களில் ரூ. 20 லட்சத்தில் குடிமராமத்து பணிகள் துவக்கம்

மன்னார்குடி, ஜூலை16: தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ 20 லட்சம் மதிப்பில் கோட் டூர் ஒன்றியத்தில் உள்ள அய்யனார் வாய்க்கால், சேரி தட்டாங்கோயில் வாய்க்கால் மற்றும் கண்டமங்கலம் வாய்க்கால்களில் குடிமராமத்து பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீர் ஆதாரங்களை செம்மைப் படுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 95 குடிமராமத்து பணிகளை ரூ.16. 04 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தில் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்கள் ஆகியவற்றை தூர்வாருதல், பழுதடைந்த கட்டுமானங்களை புனரமைத்தல், அடைப்பு பலகைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் குடிமராமத்து பணிகளாக மேற்கொள்ளப்படும். குடிமராமத்து பணிகள் மூலம் பயன் பெறும் விவசாயிகளினால் பாசனதாரர் சங்கம் அமைத்து நிறை வேற்ற வேண்டும்.இந்நிலையில் திருத்துறைப்பூண்டி வெண்ணாறு வடிநிலக்கோட்டம் 2 கீழ் சார்பில் கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2019 - 20ம்ஆண்டிற்கான 4 குடிமராமத்து பணிகளுக்கு ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள அய்யனார் வாய்க்கால், சேரி தட்டா ங் கோயில் வாய்க்கால் மற்றும் கண்டமங்கலம் வாய்க்கால்கள் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பட்டதன் அடிப்படையில் திருவாரூர் வெண்ணாறு வடிநிலக் கோட்ட செயற் பொறியாளர் திருவேட்டைச்செல்வம் அறிவுறுத்தலின் பேரில் திருத்துறைப் பூண்டி வெண்ணாறு வடிநிலக்கோட்டம் 2 ன் செயற்பொறியாளர் கண்ணப்பன் வாய்க்கால்களில் குடிமராமத்து பணிகள் நேற்று துவக்கி வைத் தார். இதில் உதவிப்பொறியாளர் கலையரசன், விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED தட்சன்குளம் படித்துறையை சீரமைக்க மக்கள் கோரிக்கை