×

நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.24.55 கோடி மானியம் ஒதுக்கீடு விவசாயிகள் பயன் பெற அழைப்பு

பெரம்பலூர்,ஜூலை16: பெரம்பலூர்மாவட்ட விவசாயிகளுக்காக நுண்ணீர்ப் பாச னத் திட்டத்திற்கு ரூ24.55கோடி மானியம்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணைஇயக்குநர் (பொ) சந்தானகிருஷ்னன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் நுண்ணீர்ப் பாசனத்திட்டத்தை மானியவிலையில் நிறுவும்பொருட்டு அரசுசார்பில் 2019& 20-20ம் ஆண்டிற்கு ரூ24.55 கோடியை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. பிரதம மந்திரி யின் நுண்ணீர்ப் பாசனத்திட்டத்தை தமிழகம்முழுவதும் கொண்டுசேர்க்கும் முயற்சி யில் அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் இத்திட்டத்தை நிறு வும் பொருட்டு நடப்பாண்டில் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் கருவிகள் வாங்குவதற்கு சிறு,குறு விவசாயிகளுக்கு 100சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75சதவீத மானியமும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக பெரம்பலூர் மாவட்ட விவ சாயிகளுக்கு ரூ24.55கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் இத் திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 152 வருவாய் கிராமங்களிலும் நுண்ணீர்ப் பாச னத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விவசாயத்திற்கு தேவையான தண்ணீருக்கு தட் டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்தசூழலில் நுண்ணீர்ப் பாசனத்திட்டத்தை விவசாயிகள் பின் பற்ற வேண்டியதுஅவசியம். இதற்காக அரசுமானியம் வழங்குகிறது. நடப்பு நிதியாண் டின்படி இத்திட்டத்தின் மூலம் 3107 எக்டேர் பரப்பளவிலான நிலம் பயனடைய உள் ளது. ஒருவிவசாயி அதிகப்பட்சமாக 12.5ஏக்கர் வரையிலான நிலத்தில் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தை நிறுவி மானியத்தைப் பெற்றுப் பயனடையலாம்.இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்கள் புகைப்படம், குடும்பஅட்டை நகல், ஆதார்அட்டை நகல், சிட்டாநகல், அடங்கல், நிலம் வரைபடம், கிணறு ஆவணம், நீர் மற்றும் மண் பரிசோதனை ஆய்வுமுடிவுகள், சிறு-குறு விவசாயிகளுக்கான சான்றிதழ் ஆகியவற்று டன் வட்டாரவேளாண் விரிவாக்க மையங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்க ளுக்கு தங்கள்பகுதி வட்டார வேளாண் உதவிஇயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.


Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது