×

பெரம்பலூர் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா

பெரம்பலூர்,ஜூலை16: பெரம்பலூர் பள்ளிகளில் காமராஜரின் 117வது பிறந்த நாள்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர்விழா கல்வி வளர்ச்சிநாளாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசி ரியை சவரியம்மாள் தலைமைவகித்தார். நிகழ்ச்சியில் காமராஜர் உருவப்படத்திற்கு மாலையணிவித்து, மலர்கள்தூவி மரியாதை செலுத்தப் பட்டது.இதேபோல் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமைஆசிரியர் சுந்தர் ராஜன் தலைமையில் காமராஜர் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது. இதில் காமரா ஜர் உருவப் படத்திற்கு மாலைஅணிவித்து, மலர்கள்தூவி மரியாதை செலுத்தப்பட் டது.



Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது