×

பெரம்பலூரில் முதன்முறையாக சாலைக்கு தமிழ்ச்சாலை பெயர் ஆட்சேபனை இருந்தால் கருத்து தெரிவிக்கலாம்

பெரம்பலூர், ஜூலை 16:பெரம்பலூர் புதுபஸ் ஸ்டாண்டு முதல் 4ரோடுவரையுள்ள சாலைக்கு முதல்முறையாக தமிழ்ச்சாலை என பெயர்சூட்டப்பட்டுள்ளது. ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம். பெரம்பலூர் நகராட்சி ஆணையர்(பொ) ராதா வேண்டு கோள். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:தமிழ் ஆட்சிமொழி தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சரின் தலைமையில் கடந்த 2018 டிசம்பர் 20ம்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி அலுவலர்களுக்கான சீராய்வுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் தலைவர்கள் பெயர் சூட்டப்படாத மக்கள்பயன்பாடு அதிகமுள்ள ஏதேனும் முதன்மைச்சாலைக்கு தமிழ்ச் சாலைஎன பெயர்சூட்ட முடிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் நகராட்சிஆணையர் வழியாக, பெரம்பலூர் புது பஸ்டாண்டுமுதல் சென்னை தேசியநெடுஞ்சாலைவரை தமிழ்சாலை எனப் பெயர்சூட்ட தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தப் பொருள்குறித்து ஆட்சேபனை தெரிவிக்கும் பொதுமக்கள் எழுத்துமூலம் பெரம்பலூர் நகராட்சிஆணையருக்கு தெரிவிக்க வேண்டும் என பெரம்பலூர் நகராட்சிஆணையர் (பொ) ராதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது