தேசிய சப்-ஜூனியர், ஜூனியர் மூவத்தாய் குத்துச்சண்டை

கோவை, ஜூலை 16:  அகில இந்திய ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் மூவத்தாய் குத்துச்சண்டை போட்டியில் 2 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்று கோவை மாணவர்கள் அசத்தினர்.   கர்நாடக மாநில மூவத்தாய் சங்கம் சார்பில் 20வது தேசிய அமெச்சூர் மூவத்தாய் குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகள் பெங்களூரில் உள்ள சக்தி ஹில்ஸில் நடந்தது. இதில் தமிழகம், ராஜாஸ்தான். கர்நாடகம், கேரளா, ஒரிசா, மணிப்பூர் அசாம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர். ஜூனியர், சப்-ஜூனியரில் 6 எடைப்பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இதில் தமிழகம் சார்பில் பங்கேற்ற கோவை மாணவர்கள் 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட 9 பதக்கங்களை வென்றனர்.  ஜூனியர் ஆண்கள் 34 கிலோ எடை பிரிவில் இளையபாரதி தங்கமும், பெண்கள் 40 கிலோ எடை பிரிவில் ஆயிஷா வெள்ளியும், 30 கிலோ எடை பிரிவில் நம்மா பிர்னாஸ் வெள்ளியும் வென்றனர். சப்-ஜூனியர் ஆண்கள் 30 கிலோ எடை பிரிவில்  நிகல் ராகித் தங்கமும், 18 கிலோ எடை பிரிவில் நபில் சாகித் வெள்ளியும், 29 கிலோ எடை பிரிவில் ஜயிம் ஆஷிக் வெள்ளியும், 31 கிலோ எடை பிரிவில் தானிப் வெள்ளியும், 19 கிலோ எடை பிரிவில் தனீஸ் கிப்ரான் வெண்கலமும், 22 கிலோ எடை பிரிவில் வெண்கலமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பெற்றோர்களும், பயிற்சியாளர்களும்  பாராட்டினர்.

Related Stories:

>