நேரு ஏரோநாட்டிக்கல் கல்லூரியில் விமானத்துறை மாணவர்களுக்கு மாடுலார் தேர்வு

கோவை, ஜூலை 16: இந்திய விமானத்துறை இயக்குனரகத்தின் அங்கீகாரம் பெற்று குனியமுத்தூரில் நேரு ஏரோநாட்டிக்கல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஆண்டு மூன்று ஆண்டுகளுக்கான விமானத்துறை மேலாண்மை குறித்த டிப்ளமோ படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த படிப்பை வழங்குவது தொடர்பான மலேசியாவின் லிங்கன் பல்கலைக்கழகத்துடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஏர் சேப்டி ஏஜென்சி நடத்தும் தேர்வுக்கான மையமாக நேரு கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்துக்கு அடுத்து இத்தகைய சர்வதேச தேர்வு மையம் கோவையில்தான் நடத்தப்படுகிறது. இத்தேர்வு நடைமுறைகளை பார்வையிட ஐரோப்பிய ஏர் ஏஜென்சி சார்பில் தேர்வு கண்காணிப்பாளராக ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மைக்கேல் ரிச்சர்ட் வில்லியம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் ஐதராபாத் இன்ஸ்டிடியூட் ஆப் ஓவர்சீஸ் ஸ்டடி சென்டர் அமைப்பு தலைமைச் செயல் அதிகாரி ரமேஷ்பதியும் தேர்வுப் பணிகளை நேரு விமானவியல் கல்லூரியில் மேற்பார்வையிட்டனர்.கணிதம் தொடர்பான முதல் மாடியூல் 1 தேர்வை 41 மாணவர்களும், இயற்பியல் தொடர்பான மாடியூல் இரண்டாவது தேர்வை 11 மாணவர்களும், ஏரோடைனமிக்ஸ் தொடர்பான மாடியூல் தேர்வை 59 பேரும் எழுதினர்.  இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு சர்வதேச அளவில் சிறப்பான வேலை வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: